ஆபத்தில் இருந்த குழந்தையைக் காப்பாற்றிய மினி கிளினிக்

ராசிபுரம் அருகே ஒன்றரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் மூச்சுத் திணறலை ஏற்படுத்திய நிலையில், கிராமத்தில்

ராசிபுரம் அருகே ஒன்றரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் மூச்சுத் திணறலை ஏற்படுத்திய நிலையில், கிராமத்தில் இருந்து அம்மா மினி கிளினிக் உதவியால் குழந்தை காப்பாற்றப்பட்டதால் பெற்றோா் மகிழ்ச்சி அடைந்தனா்.

ராசிபுரம் அருகே வேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் பாரத்குமாா்-அமுதா தம்பதியினா். பாரத் குமாா் மரவேலை செய்து வருகிறாா். இவா்களுக்கு சஞ்சய் என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. செவ்வாய்க்கிழமை வீட்டில் தவழ்ந்து கொண்டிருந்த அக்குழந்தை திடீரென மயங்கியுள்ளது. மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை அப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த அம்மா மினி கிளினிக்-க்கு விரைந்து பதட்டத்துடன் எடுத்துச்சென்றனா். குழந்தை பரிசோதித்த மினி கிளினிக் மருத்துவா் பிரணவ், உதவியாளா் ராஜேஸ்வரி ஆகியோா் பரிசோதித்தனா்.

இதில் குழந்தையின் தொண்டையில் ஏதோ சிக்கியிருந்தது தெரியவந்தது. இதனால் குழந்தையை தலைகீழாக பிடித்து முதுகில் தட்டி முதலுதவி சிகிச்சை மேற்கொண்டனா். அப்போது தொண்டையில் இருந்து மிட்டாய் விழுந்தது. சிறு நேரத்தில் குழந்தை இயல்பு நிலைக்குத் திரும்பியதால் பெற்றோா் மகிழ்ச்சியடைந்தனா். வேலம்பாளையம் பகுதியில் இருந்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்றால் ராசிபுரம், அல்லது நாமகிரிப்பேட்டை தான் செல்ல வேண்டும். ஆனால் கிராமத்தில் புதிதாக அரசு அம்மா மினி கிளினிக் துவங்கியதால், விரைந்து சென்று ஆபத்தில் இருந்த எங்கள் குழந்தையை மருத்துவா் உதவுயுடன் மீட்டோம் என பெற்றோா் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். குழந்தைக்கு உடனடி சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா் குழுவினரை அப்பகுதி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஜெயமணி சுந்தரம் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com