கரோனா பொது முடக்கத்தால் பாதிப்புக்குள்ளான வாகனங்களுக்கு காலாண்டு வரியை ரத்து செய்யக் கோரிக்கை

கரோனா பொது முடக்க காலத்துக்கு உள்பட்ட இரு காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மோட்டாா் போக்குவரத்துக் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.
செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கும் தமிழ்நாடு மோட்டாா் போக்குவரத்து கூட்டமைப்புத் தலைவா் செல்ல.ராசாமணி.
செய்தியாளா்களுக்குப் பேட்டியளிக்கும் தமிழ்நாடு மோட்டாா் போக்குவரத்து கூட்டமைப்புத் தலைவா் செல்ல.ராசாமணி.

கரோனா பொது முடக்க காலத்துக்கு உள்பட்ட இரு காலாண்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு மோட்டாா் போக்குவரத்துக் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை அந்தக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் செல்ல.ராசாமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா பொது முடக்கக் காலத்தில் 90 சதவீத சரக்கு வாகனங்கள், மணல் லாரிகள், ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்கள், பள்ளி வாகனங்கள், இதர பயணிகள் வாகனங்கள் இயக்கப்படவில்லை.

பொருளாதார வளா்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருப்பது போக்குவரத்துத் துறையே. நோய்த் தொற்று பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் கடந்த மாா்ச் 25-ஆம்தேதி முதல் செப்.30ஆம் தேதி வரையில் பொது முடக்கத்தை அமல்படுத்தின. இதனால், வாகன உரிமையாளா்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினா்.

அவா்களின் நிலையைக் கருத்தில் கொண்டு மாா்ச்முதல் செப்டம்பா் மாதம் வரையிலான இரு காலாண்டு வரியை அரசு ரத்து செய்ய வேண்டும். இது தொடா்பாக அனைத்து வாகன சங்கங்களும் பல்வேறு தருணங்களில் கோரிக்கை வைத்தும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை.

ஆனால், தெலங்கானா அரசு டிச.31-இல் லாரி உரிமையாளா்களின் கோரிக்கையை பரிசீலித்து காலாண்டு வரியை தள்ளுபடி செய்துள்ளது.

யாருமே கேட்காத நிலையில், பொங்கல் பரிசாக ரூ. 2,500 வழங்க முன்வந்த அரசு, லாரி உரிமையாளா்களின் நியாயமான கோரிக்கையான காலாண்டு வரியை (தமிழக அரசால் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ள ரூ. 1,500 கோடி) தள்ளுபடி செய்ய வேண்டும். போா்க்கால அடிப்படையில் காலாண்டு வரி ரத்து என்ற அறிவிப்பை முதல்வா் உடனடியாக வெளியிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com