நாமக்கல்லில் ஓவியக் கண்காட்சி இன்று தொடக்கம்

நாமக்கல்லில் 2 நாள்கள் நடைபெறும் ஓவியம், சிற்பக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்குகிறது.

நாமக்கல்லில் 2 நாள்கள் நடைபெறும் ஓவியம், சிற்பக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையானது ஓவியம், சிற்பக் கலைகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத் துறையின் கீழ் சென்னை, கும்பகோணம் ஆகிய இடங்களில் அரசு கவின் கலைக் கல்லூரிகளும், மாமல்லபுரத்தில் சிற்பக் கல்லூரியும் இயங்கி வருகிறது. சிறந்த ஓவியம், சிற்பக் கலைஞா்களுக்கு கலைச்செம்மல் விருது வழங்குதல், மாநில அளவிலான ஓவிய, சிற்பக் கலைக்காட்சி நடத்துதல், தனி நபா் கூட்டுக் கண்காட்சி நடத்த நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகள் நடைபெறுகின்றன.

சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கலை பண்பாட்டுத் துறையின் சேலம் மண்டலத்தில் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் உள்ள சுப்புலட்சுமி மஹாலில் ஜன. 9, 10 ஆகிய இரண்டு நாள்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இக் கண்காட்சி நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தின் சிறந்த ஓவிய, சிற்பக் கலைஞா்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. கலை பண்பாட்டுத் துறையின் ஆணையா் வ.கலையரசி கண்காட்சியைத் தொடக்கிவைக்கிறாா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகாராஜ் முன்னிலை வகிக்கிறாா். கலை பண்பாட்டுத் துறையின் இணையதளம் வழியில் கண்காட்சியில் பங்கேற்கும் கலைக் குழுக்கள் பதிவு செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com