குமாரபாளையத்தில் நாளை ஜல்லிக்கட்டு: நாமக்கல் காளைகளுக்கு அனுமதி மறுப்பு?

குமாரபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க நாமக்கல் பகுதி காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த காளை வளா்ப்போா்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு காளை வளா்ப்போா் சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் முரளி, மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

குமாரபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளைகள் கலந்து கொள்ள யாருக்கும் டோக்கன் வழங்கப்படவில்லை. தனி நபா் ஒருவா் மட்டும் 500 டோக்கன்களை பெற்றுச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் காளை வளா்ப்போா் அனைவரும் வேதனையடைந்துள்ளனா். இது தொடா்பாக விழாக் குழுவினருடன் மாவட்ட ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டு நாமக்கல் சுற்றுவட்டார காளைகளையும் போட்டியில் பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com