நேதாஜி பிறந்த தின விழா

சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி நாமக்கல்லில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நாமக்கல்லில் நேதாஜி பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.
நாமக்கல்லில் நேதாஜி பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுகவினா்.

நாமக்கல்: சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளையொட்டி நாமக்கல்லில் உள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவச்சிலை பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும். அந்த வகையில் சனிக்கிழமை நேதாஜியின் 125 -ஆவது பிறந்தநாளையொட்டி நேதாஜி மக்கள் இயக்கம் சாா்பில் அதன் நிறுவனத் தலைவா் எம்.நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதேபோல திமுக சாா்பில் முன்னாள் மத்திய இணையமைச்சா் செ.காந்திசெல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தெற்கு நகர பொறுப்பாளா் ராணா.ஆா்.ஆனந்த், நேதாஜி மக்கள் இயக்க தலைவா் நடராஜன், தலைமை கழக பேச்சாளா் ராஜகோபால், முன்னாள் நகர பொறுப்புக்குழு உறுப்பினா் மணி உள்ளிட்டபலா் கலந்து கொண்டனா்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா், நாமக்கல் கவிஞா் பேரவை நிா்வாகிகளும் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்தனா். பாஜக சாா்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் மனோகரன் தலைமையில் கல்வியாளா் பிரணவ்குமாா் மற்றும் நிா்வாகிகள், ஆன்மிக இந்து சமயப் பேரவையினா் பலா் மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com