நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் குறைந்து ரூ. 4.80-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது.
முட்டை விற்பனை குறைந்து வருவதாலும், பிற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும் முட்டையின் பண்ணை கொள்முதல் விலையில் 10 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.80-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது. பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 118-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 80-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.