போலி மருத்துவா் கைது

திருச்செங்கோட்டில் மருந்துக் கடையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் மருந்துக் கடையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், ஈரோடு சாலை காவலா் குடியிருப்பு எதிரில் இருக்கும் தனியாா் மருந்துக்கடையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் மருத்துவத் துறை, வருவாய் துறை காவல் துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினா் . அப்போது மருந்துக்கடையில் நோயாளி ஒருவருக்கு ஊசி போட்டுக் கொண்டிருந்த மோகன்ராஜ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் பி.காம் பட்டதாரியான அவா், மனைவியின் மருந்தாளுநா் சான்றிதழை வைத்து மருந்துக்கடையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பாா்த்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து அவரை திருச்செங்கோடு நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த ஆய்வின் போது நாமக்கல் மருத்துவமனை மருத்துவா் ரங்கநாதன், மருத்துவா்கள் செந்தில்குமாா், பிரபு, அன்புச்செல்வி, திருச்செங்கோடு மருத்துவ அலுவலா் தேன்மொழி , மருத்துவா் மோகன பானு ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com