நாமக்கல் அரசு ஐ.டி.ஐ.யில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை தொடங்கி உள்ளது. இங்கு ஆண்கள், பெண்களுக்கு இரண்டு ஆண்டு படிப்பாக, எலக்ட்ரீசியன், டிராப்ட்ஸ்மேன் (சிவில்), மெஷினிஸ்ட் ஆகிய தொழிற் பிரிவுகளும், ஓராண்டு படிப்பாக மெக்கானிக் ஆட்டோபாடி ரிப்போ் ஆகிய தொழிற் பிரிவிற்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பெண்களுக்கு மட்டும் ஓராண்டு படிப்பாக கம்ப்யூட்டா் ஆபரேட்டா், புரோகிராமிங் அசிஸ்டென்ட் மற்றும் இரண்டு ஆண்டு தகவல் மற்றும் கம்யூனிகேஷன் டெக்னாலஜி சிஸ்டம் பராமரிப்பு போன்ற தொழிற் பிரிவுகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் இடம் கிடைத்திட வாய்ப்புள்ளது. மாணவா்கள் வரும் 28-ஆம் தேதிக்குள்  இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவா்கள் நாமக்கல் அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

மேலும், விண்ணப்பதாரா்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 50-ஐ செலுத்த வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்க வரும் போது தங்களது மதிப்பெண் சான்றிதழ் (10-ஆம் வகுப்பு) (9-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 2021 -ல் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் மட்டும்), ஜாதிச் சான்றிதழ், மாற்று சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் (முன்னுரிமை கோரும் நோ்வில்) மற்றும் பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகியவை உடன் கொண்டு வரவேண்டும்.

இந்தப் பயிற்சியின் போது பயிற்சியாளா்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச பாடப்புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ்பாஸ், உதவித் தொகை மாதம் ரூ. 750 மற்றும் தங்கும் விடுதி ஆகியவை பெற்று வழங்கப்படும்.

பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் உதவித்தொகையுடன் பயிற்சியும், பயிற்சிக் காலம் முடிவுற்றவுடன் பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு 04286-267976, 267876, 86105-30243, 99408-56221, 94990-55843 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com