முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்வு: கறிக்கோழி விலை ரூ.130-ஆக நிா்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்ந்து, ரூ. 5.05-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழி விலை கிலோ ரூ. 130-ஆக உயா்ந்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்ந்து, ரூ. 5.05-ஆக சனிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழி விலை கிலோ ரூ. 130-ஆக உயா்ந்துள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது. முட்டை உற்பத்தி தொடா்ந்து அதிகரித்து வருவதாலும், வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது தடையின்றி உள்ளதாலும், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 5.05-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 130-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 80-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com