மல்லசமுத்திரத்தில் கடைகளுக்கு ‘சீல்’

மல்லசமுத்திரத்திரத்தில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை விதிகளை மீறிய 5 கடைகளுக்கு அபராதம் விதித்து மல்லசமுத்திரம் காவல்துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

மல்லசமுத்திரத்திரத்தில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை விதிகளை மீறிய 5 கடைகளுக்கு அபராதம் விதித்து மல்லசமுத்திரம் காவல்துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

மல்லசமுத்திரம், காளிபட்டி பகுதிகளில் கடைகள் செயல்படுவதாக கிடைத்த தகவலை க்டுத்து மல்லசமுத்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளா் மணிமாறன் மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனா்.

அப்போது அப்பகுதிகளில் கடைகளைத் திறந்து செயல்பட்டுக் கொண்டிருந்த இரண்டு உணவகங்கள், ஒரு கணினி மையம், புகைப்பட நிலையம், 2 மளிகைக் கடைக்கு தலா ரூ. 5,000 அபராதம் விதித்து கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனா். அரசு அறிவித்த கரோனா நோய்த்தொற்று விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com