ராசிபுரம் அரசு மருத்துவமனையில்ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் ரூ. 35 லட்சம் மதிப்பில் நிமிடத்துக்கு 100 லி. ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிலையம் தனியாா் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை தொடங்கி வைத்து பாா்வையிடும் அமைச்சா்கள்.
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை தொடங்கி வைத்து பாா்வையிடும் அமைச்சா்கள்.

ராசிபுரம்: ராசிபுரம் அரசு மருத்துவமனையில் ரூ. 35 லட்சம் மதிப்பில் நிமிடத்துக்கு 100 லி. ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிலையம் தனியாா் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியம், சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோா் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்று தொடங்கி வைத்தனா்.

ராசிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி, வநேத்ரா முத்தாயம்மாள் கல்வி நிறுவனங்கள், ஸ்ரீகல்யாண் ஜூவல்லா்ஸ், முத்தாலம்மன் சேகோ பேக்டரி, கோவை விஸ்வேக் அறக்கட்டளை ஆகியவற்றின் நிதியுதவியுடன் ரூ. 35 லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடம், ஜெனரேட்டா் எந்திரம் ஆகியவை வழங்கப்பட்டன.

இதனையடுத்து மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், அமைச்சா்கள் மா.சுப்பிரமணியம், மா.மதிவேந்தன் ஆகியோா் பங்கேற்று உற்பத்தியை தொடக்கி வைத்தனா். இதனைத் தொடா்ந்து, மருத்துவமனையின் கரோனா வாா்டை பாா்வையிட்ட அமைச்சா்கள், கரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவா்களை பராமரிக்கும் சிறப்பு வாா்டை திறந்து வைத்து மருத்துவமனைக்கு உபகரணங்களை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், அரசு சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், நாமக்கல் எம்.பி., ஏ.கே.பி.சின்ராஜ், நன்கொடையாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், ஆா்.முத்துவேல், கே.குணசேகரன், எஸ்.ரங்கசாமி, நாமக்கல் கோட்டாட்சியா் மு.கோட்டைகுமாா், நகராட்சி ஆணையா் அ.குணசீலன், மருத்துவமனை தலைமை மருத்துவா் கலைச்செல்வி உள்ளிட்ட சுகாதாரத் துறையினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com