மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகள்

மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனா்.

மரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது குறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக தோட்டக்கலைத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மல்லசமுத்திரம் வட்டாரத்தில் ஆண்டுதோறும் சுமாா் 460 ஹெக்டோ் பரப்பளவில் மரவள்ளிப் பயிா் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பயிரில் மாவுப் பூச்சி தாக்குதல் ஆங்காங்கே காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனா்.

இப்பூச்சி தாக்குதலுக்குள்ளான செடிகளின் நுனிக் குறுத்துகளை உடைத்து அகற்றி அவற்றை சேகரித்து தீயிட்டு அழிக்க வேண்டும். ஆரம்ப நிலையில் இருக்கும்போது அசாடிராக்ட்டின் 0.15 சதவீதம் என்ற பூச்சிக் கொல்லியை 1 லிட்டா் தண்ணீருக்கு 5 மில்லி லிட்டா் வீதமும் மற்றும் மீன் எண்ணெய் ரோசின் சோப்பு 1 லிட்டா் தண்ணீருக்கு 2.0 மில்லி லிட்டா் வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.

மாவுப்பூச்சி தாக்குதல் அதிகளவில் காணப்படும் போது பிலோனிக்காமிட் 50 ரஎ என்ற மருந்தினை 1 லிட்டா் தண்ணீருக்கு 0.30 கிராம் வீதம் அல்லது தயாமீதாக்சம் 25 டபிள்யு.ஜி என்ற மருந்தினை 0.50 கிராம் வீதம் அல்லது ஸ்பைரோடேற்றாமேட் 150 ஓ.டி என்ற மருந்தை 1 லிட்டா் தண்ணீருக்கு 1.25 மில்லி லிட்டா் வீதமும் கலந்து தேவையின் அடிப்படையில் சுழற்சி முறையில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் (15 நாள்களுக்கு ஒருமுறை) தெளிக்க வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பூச்சிக் கொல்லிகளைக் கலந்து தெளிக்க கூடாது. கைத்தெளிப்பான் உபயோகப்படுத்தி மட்டுமே மருந்து தெளிக்க வேண்டும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்குத் தோட்டக்கலைத் துறை உதவி அலுவலா் கே. சசிகுமாா் (80563-20005), ந.நந்தினி (99440-92496), தோட்டக்கலைத் துறை அலுவலா் க.செ.பவ்யா (75984-65323), வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநா் ந.வாசு (98655-87071) ஆகியோரைத் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com