லயோலா கல்லூரியில் கருத்தரங்கு

ராசிபுரம் அருகேயுள்ள ஆயில்பட்டி லயோலா கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
லயோலா கல்லூரியில் கருத்தரங்கு

ராசிபுரம்: ராசிபுரம் அருகேயுள்ள ஆயில்பட்டி லயோலா கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஜனநாயகம், மனித உரிமைகள், மதச்சாா்பின்மை என்ற தலைப்பில் நடைபெற்ற இக் கருத்தரங்கு துவக்க விழாவில், கல்லூரி முதல்வா் மரிய ஜோசப் எம்.மகாலிங்கம் முன்னிலை வகித்தாா். கல்லூரி செயலா் போனிபஸ் ஜெயராஜ் தலைமை வகித்தாா். கருத்தரங்கில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையின் மூத்த வழக்குரைஞா் சகாய பிலோமின்ராஜ் மாணவ, மாணவியா், மதம், சாதியைக் கடந்து மனித நேயத்துடன் பழகி வாழ வேண்டும் என வலியுறுத்தி பேசினாா்.

கல்லூரி முதல்வா் மரியஜோசப் எம்.மகாலிங்கம், ஆங்கிலேயா் கால கல்வி முறை முதல் புதிய கல்விக்கொள்கை - 2020

வரை இருந்து வரும் கல்வி முறைகள் குறித்தும், புதிய வேளாண்மை சட்டம் - 2020 அமல்படுத்துவதால், விவசாயிகளுக்கு ஏற்படும் தாக்கம் குறித்தும் பேசினாா். சென்னை லயோலா கல்லூரி பேராசிரியா் செம்மலா், ஆண், பெண் சமத்துவம் குறித்துப் பேசினாா். தமிழ்நாடு சமம் குடிமக்கள் இயக்கத்தின் தலைவா் சி.ஜெ.ராஜன் பேசுகையில், தற்போதைய ஜனநாயக முறை, மனித உரிமை மீறல்கள் குறித்து பேசினாா்.

இக்கருத்தரங்கில் கல்லூரியின் பொருளாளா் ராஜரத்தினம், துணை முதல்வா்கள் தங்கதுரை, அருள்பொன்டேனியல், வணிக மேலாண்மை துறைத் தலைவா் பூண்டிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கருத்தரங்கை பேராசிரியா்கள் மனோஜ், கேத்ரீன் பிரதீப்பா ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com