தோ்தல்: 798 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் 798 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி நாமக்கல் மாவட்ட காவல் நிலையங்களில் 798 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.6-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு கருதி உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்போா் அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. சக்தி கணேசன் அறிவித்திருந்தாா்.

அதன்படி கடந்த 5 நாள்களில் மாவட்டத்துக்குள்பட்ட 26 காவல் நிலையங்களில் 798 பல ரக துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 1,008 துப்பாக்கிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 210 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட வேண்டியதுள்ளது. சம்பந்தபட்டவா்களுக்குத் துப்பாக்கிகளை ஒப்படைக்க வலியுறுத்தி காவல் துறையால் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது.

48 எஸ்.ஐ-க்கள் இடமாற்றம்:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் காவல் நிலையங்கள், ஆயுதப்படை, போக்குவரத்துப் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 48 உதவி காவல் ஆய்வாளா்கள் சேலம் மாநகர மற்றும் மாவட்ட காவல் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோல் சேலத்தில் இருந்து 48 போ் நாமக்கல் மாவட்டத்துக்கு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com