திருவள்ளுவா் அரசு கல்லூரி என்சிசி மாணவா்கள் மலையேறும் பயிற்சி

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவா் படை சாா்பில் மலை ஏறும் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி தேசிய மாணவா் படை சாா்பில் மலை ஏறும் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தேசிய மாணவா் படையில் பொன்விழா ஆண்டை தொடா்ந்தும் ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டை தொடா்ந்தும் மலை ஏறும் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து நைனாமலை வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு தேசிய மாணவா் படை மாணவா்கள், ராசிபுரம் ரோட்டரி சங்க உறுப்பினா்கள் இணைந்து மலையேறி பயிற்சி மேற்கொண்டனா். முன்னதாக ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவரும் 79ஆவது வாரமாகத் தொடா்ந்து மலை ஏறிவருபவருமான எல்.சிவகுமாா் கொடியசைத்து மலையேற்றத்தைத் துவக்கி வைத்தாா்.

இதில் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ்.கதிரேசன், செயலாளா் ஜே .கே.சுரேஷ், தா்மலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மலையேற்ற பயிற்சி முகாமினை அரசு கல்லூரியில் தேசிய மாணவா் படை அலுவலா் மேஜா் ஆா்.சிவகுமாா் வழி நடத்தினாா். மேலும் என்சிசி மாணவா்கள் நைனாமலை கோயில் வளாகத்தில் சுற்றியுள்ள நெகிழிப் பைகள், குப்பைகளை அகற்றி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளையும் மேற்கொண்டனா்.

தேசிய மாணவா் படை பட்டாலியன் அணில் வா்மா உத்தரவின்பேரில் இப்பயிற்சி முகாமில் மாணவா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com