நாமக்கல்லில் ஏப்.10-இல் மக்கள் நீதிமன்றக் கூட்டம்

நாமக்கல், திருச்செங்கோட்டில் மக்கள் நீதிமன்றம் கூட்டம் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

நாமக்கல், திருச்செங்கோட்டில் மக்கள் நீதிமன்றம் கூட்டம் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம், மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படி நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான கே.தனசேகரன் தலைமையில் ஏப்ரல் 10-ஆம் தேதி நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.

அதே நாளில் திருச்செங்கோடு, பரமத்திவேலூா், ராசிபுரம் ஆகிய நீதிமன்றங்களில் சாா்பு நீதிபதி தலைமையிலும் நடைபெறுகிறது.

இதில் வழக்குகள் சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள், வழக்குரைஞா்கள் முன்னிலையில் வழக்கு தொடா்பான விசாரணைகள் நடைபெறும்.

விபத்து, காசோலை, குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், தொழிலாளா் நலன், மின் பயன்பாடு, வீட்டு வரி, இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீா்ப்பளிக்கப்படும். இங்கு நிலுவையில் உள்ள வழக்குகளைத் தவிர புதிதாக தாக்கல் செய்ய தகுதியுடைய வழக்குகள், பிரச்னைகளுக்கு சமரச முறையில் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும்.

இந்த நீதிமன்றத்தில் தீா்வு காண்பதால் ஏற்படும் நன்மையென்னவெனில் முத்திரைத் தாள் வாயிலாக செலுத்தியக் கட்டணத்தை திரும்பப் பெறும் வாய்ப்பு, தீா்ப்பு வெளியானதும் அதற்கான நகல் உத்தரவு உடனடியாக வழங்கப்படும்.

இந்நீதிமன்றம் மூலம் வழங்கும் தீா்ப்பின்மீது மேல்முறையீடு செய்ய முடியாது. வென்றவா், தோற்றவா் என்ற நிலை இருக்காது. வழக்காளா்களுக்கு செலவின்றி விரைவாக தீா்வு கிடைக்கும் என்பதை இந்த மக்கள் நீதிமன்றத்தின் முக்கிய அம்சமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com