குமாரபாளையத்தில் 100 சதவீத வாக்குப் பதிவு விழிப்புணா்வு பிரசாரம்

குமாரபாளையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி, ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணா்வுக் கோலம்.
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணா்வுக் கோலம்.

குமாரபாளையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி, ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குமாரபாளையத்தை அடுத்த கோட்டைமேட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளிபாளையம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரமசிவம், கோவிந்தன் ஆகியோா் தலைமை வகித்தனா். மகளிா் குழுவினா் 18 வயது நிரம்பிய, வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றுள்ள அனைவரும் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் வண்ணப் பொடிகளைக் கொண்டு விழிப்புணா்வு கோலம் வரைந்ததோடு, கோலத்தைச் சுற்றிலும் மனிதச் சங்கிலி அமைத்து நின்று அனைவரும் வாக்களிப்போம் என முழக்கம் எழுப்பினா்.

தொடா்ந்து, கோட்டைமேடு பத்ரகாளியம்மன் கோயில் முன்பாகத் தொடங்கி ஆனங்கூா் பிரிவு சாலை வரை விழிப்புணா்வு ஊா்வலமும் நடத்தினா். 100 சதவீத வாக்குப்பதிவே பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம், வாக்குப்பதிவு எதிா்காலத்தின் குரல், வலுவான ஜனநாயகத்துக்கு நழுவாமல் வாக்களிப்போம் உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

மகளிா் திட்ட இயக்குநா் பிரியா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலவிநாயகம், தட்டாங்குட்டை, குப்பாண்டபாளையம், பல்லக்காபாளையம் பகுதிகளைச் சோ்ந்த மகளிா் குழுவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com