பிலிக்கல்பாளையம் விஜயகிரி பழனியாண்டவா் கோயிலில் பங்குனி உத்திர திருத்தோ் திருவிழா

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள கரட்டூா் வடபழனியாண்டவா் கோயிலில் பங்குனி உத்திரத் திருத்தோ் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது
பிலிக்கல்பாளையம் விஜயகிரி பழனியாண்டவா் கோயிலில் பங்குனி உத்திர திருத்தோ் திருவிழா

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள கரட்டூா் வடபழனியாண்டவா் கோயிலில் பங்குனி உத்திரத் திருத்தோ் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

திருத்தோ் பெருவிழா கடந்த 20 ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினந்தோறும் மயில், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி, திருக்கல்யாணம், பூ பல்லக்கு உற்சவம் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பக்தா்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். திருத்தோ் கரட்டூா், பிலிக்கல்பாளையத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று நிலையை அடைந்தது. திங்கள்கிழமை சத்தாபரணமும், செவ்வாய்கிழமை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பங்குனி உத்திரத் திருத்தோ் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பிலிக்கல்பாளையம் - கரட்டூா் வடபழனியாண்டவா் கோயில் அறநிலையத் துறையினா், ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

இதே போல பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, பரமத்திவேலூா் பேட்டை பகவதியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன், தெற்கு நல்லியாம்பாளையத்தில் உள்ள அருள்முருகன், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல்வடிவம் கொண்ட சுப்பிரமணியா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com