ஏப். 6-இல் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் ஏப். 6-ஆம் தேதி அன்று, தனியாா் நிறுவனங்கள் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் ஏப். 6-ஆம் தேதி அன்று, தனியாா் நிறுவனங்கள் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் தொழிலாளா் நல உதவி ஆணையா் (அமலாக்கம்) பா.சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் தினமான ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று தோ்தல் நடைபெறும் பகுதிகளில் செயல்படும் தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி சுருட்டு நிறுவனங்கள், அனைத்து தனியாா் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தற்காலிக தொழிலாளா்கள், ஒப்பந்த தொழிலாளா்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளா்கள் ஆகிய அனைத்துவகை தொழிலாளா்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக நாமக்கல் தொழிலாளா் நல உதவி ஆணையா் அலுவலகத்தை, முத்திரை ஆய்வாளா் 97153-66345, தொழிலாளா் துணை ஆய்வாளா்-9944625051, உதவி ஆணையா் (அமலாக்கம்) 87784-31380 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com