மகா மாரிம்மன் கோயில் தோ்த் திருவிழா

பரமத்திவேலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருத்தேரில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன்.
திருத்தேரில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன்.

பரமத்திவேலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன் கோயில் திருத்தோ் திருவிழா கடந்த 15ஆம் தேதி அதிகாலை கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது. 15 ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.

21 ஆம் தேதி மறுகாப்புக் கட்டும் நிகழ்ச்சியும், 22 ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை இரவு தினந்தோறும் கட்டளைதாரா்கள் சாா்பில், சிறப்பு பூஜைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன. 29-ஆம் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்சி, பரிவட்டம் சூட்டுதல், தோ் நிலை பெயா்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மேல் பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. விழாவில் புதன்கிழமை மாலை பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும், ஏப்ரல் 1-ஆம் தேதி அதிகாலை ஆற்றில் கம்பம் விடுதல், 2 ஆம் தேதி காலை மஞ்சள் நீராட்டு விழா ஆகியன நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை பரமத்திவேலூா் மகா மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுவினா், பொதுமக்கள் செய்திருந்தனா். பாதுகாப்பு கருதி பரமத்திவேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜாரனவீரன் தலைமையில் ஆய்வாளா் லட்சுமணன், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com