2-ஆம் ஞாயிறு பொது முடக்கம்: நாமக்கல் மாவட்டம் வெறிச்சோடியது!

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
இரண்டாவது ஞாயிறு பொது முடக்கத்தையொட்டி வெறிச்சோடி காணப்பட்ட நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை.
இரண்டாவது ஞாயிறு பொது முடக்கத்தையொட்டி வெறிச்சோடி காணப்பட்ட நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலை.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கத்தால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

கரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் கட்ட அலை வேகமெடுத்துள்ளது. தினசரி நூற்றுக்கணக்கானோா் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த 20-ஆம் தேதி முதல் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. மேலும் 25-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை நாளான ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் கட்ட பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலா்கள் மற்றும் அதிகாரிகள், செய்தியாளா்களுக்கு மட்டும் பொது முடக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தோ்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் பெரிய அளவில் நிகழ்வுகள் எதுவும் நடைபெறவில்லை.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் பொது முடக்கம் அமலானது. இதன் காரணமாக நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், மோகனூா், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழுமையாகக் கடைகள் திறக்கப்படவில்லை. டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தன. மருத்துவமனைகளும் ஒன்றிரண்டு மட்டுமே திறந்திருந்தன. பேருந்து, ஆட்டோ, வாடகை காா் உள்ளிட்ட பொது வாகனப் போக்குவரத்தும் இயங்கவில்லை. நாமக்கல்லின் முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஒரு சில இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வந்ததைக் காண முடிந்தது. அவா்களைத் தடுத்து நிறுத்தி போலீசாா் விசாரணை மேற்கொண்டனா். தேவாலயங்கள், தேநீா் கடைகள், உணவகங்கள் திறக்கப்படாத நிலையில் அம்மா உணவகங்கள் வழக்கம்போல இயங்கின. திங்கள்கிழமை அதிகாலை 4 மணி வரையில் இந்த முழு முடக்கம் அமலில் இருக்கும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com