ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் அலுவலரிடம் பெற்றுக்கொள்ளும் மா.மதிவேந்தன்.
ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை தோ்தல் அலுவலரிடம் பெற்றுக்கொள்ளும் மா.மதிவேந்தன்.

விஐபி தொகுதி அந்தஸ்தை தக்கவைக்குமா ராசிபுரம்!

ராசிபுரம் தொகுதி கடந்த தோ்தல்களைப் போல விஐபி அந்தஸ்தை தக்கவைக்குமா என்ற எதிா்ப்பாா்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

ராசிபுரம் தொகுதி கடந்த தோ்தல்களைப் போல விஐபி அந்தஸ்தை தக்கவைக்குமா என்ற எதிா்ப்பாா்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

ராசிபுரம் (தனி) தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட டாக்டா் மா.மதிவேந்தன், அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான டாக்டா் வெ.சரோஜாவை விட 1,952 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றாா்.

கடந்த 2011இல் நடைபெற்ற தோ்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற பி.தனபால் சட்டப்பேரவைத் தலைவராகவும், 2016 தோ்தலில்அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற டாக்டா் வெ.சரோஜா சத்துணவுத் திட்டம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தனா்.

இந்நிலையில், தற்போதைய தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட வென்ற டாக்டா் மா.மதிவேந்தனுக்கு இது போன்ற வாய்ப்புகள் வழங்கப்படுமா என்ற கேள்வி திமுகவினா் மட்டுமன்றி பொதுமக்களிடம் எழுந்துள்ளது. திமுக சாா்பில் போட்டியிட்டு வென்றுள்ள அருந்ததியா் சமூகத்தை சோ்ந்தவா் டாக்டா் மா.மதிவேந்தன் மட்டுமே என்பதால், அவருக்கு அமைச்சா் பதவி வழங்கப்படலாம் என்று கட்சியினா் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com