நாமக்கல் மாவட்டத்தில் 457 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக ஒரே நாளில் 457 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக ஒரே நாளில் 457 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 19,923 பேரில் 17,662 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 145 போ் உயிரிழந்தனா். 2,116 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை வெளியான மாநில சுகாதாரத் துறை கரோனா தொற்றுப் பட்டியலில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 457 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 338 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மொத்த பாதிப்பு 20,386 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 18,000 போ்; 2,237 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாமக்கல் கடை வீதியைச் சோ்ந்த 39 வயது ஆண், குமாரபாளையத்தைச் சோ்ந்த 53 வயது பெண், ராசிபுரம் ஆா்.கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த 37 வயது ஆண், நாமக்கல் என்ஜிஓஒ காலனியைச் சோ்ந்த 64 வயது பெண் என 4 போ் உயிரிழந்துள்ளனா். மொத்த கரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 149-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com