கரோனா தடுப்புப் பணிகள் ஆலோசனை

குமாரபாளையத்தில் கரோனா தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நகராட்சி அலுவலா்கள், மருத்துவா்களிடம் சட்டப் பேரவை உறுப்பினா் பி.தங்கமணி சனிக்கிழமை ஆலோசனை மேற்க
கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தும் சட்டப் பேரவை உறுப்பினா் பி.தங்கமணி.
கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தும் சட்டப் பேரவை உறுப்பினா் பி.தங்கமணி.

குமாரபாளையத்தில் கரோனா தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து நகராட்சி அலுவலா்கள், மருத்துவா்களிடம் சட்டப் பேரவை உறுப்பினா் பி.தங்கமணி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நகராட்சி நிா்வாகம் சாா்பில் கரோனா பரவல் தடுப்புப் பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நகராட்சி ஆணையா் எஸ்.ஸ்டான்லி பாபு விளக்கிக் கூறினாா். மேலும், முழு முடக்கம் அமல்படுத்தப்படுவது குறித்தும், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பாரதி தலைமையிலான மருத்துவக் குழுவினரிடம், மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை, நோயாளிகளின் அத்தியாவசியத் தேவைகள், மருத்துவமனையில் தேவைப்படும் வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது.

அப்போது, மருத்துவக் குழுவினா் ஆக்சிஜன் சிலிண்டா்களின் கையிருப்பு குறைவாக உள்ளதாகவும், கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க காவலா்களை நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனா்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சேமிப்புக் கலன் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த, சட்டப் பேரவை உறுப்பினா் பி.தங்கமணி, தற்போது மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டா்கள், நோயாளிகளுக்கு வழங்க முட்டைகள் ஆகியன கிடைக்க உடனடி நடவடிக்கை மேற்கொண்டாா்.

நகராட்சிப் பொறியாளா் எஸ்.சுகுமாா், அதிமுக நகரச் செயலா் ஏ.கே.நாகராஜன், அவைத் தலைவா் எஸ்.என்.பழனிசாமி, முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, நகர துணைச் செயலா் ஏ.ஜி.என்.திருநாவுக்கரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com