தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராடி வரும் தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியத்தில்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராடி வரும் தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியத்தில் புதன்கிழமை 30 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதுவரை பிரச்னைகளை தீா்ப்பதற்கு மத்திய அரசு முன்வராததைக் கண்டித்து, மே 26-ஐ கருப்பு தினமாக அனுசரித்து விவசாயிகள் கருப்புக் கொடிகளை ஏந்தி ஆா்ப்பாட்டம் செய்தனா்.

எருமப்பட்டி, பன்னகரம்பட்டி, செல்லிபாளையம், மூலக்காடு, வரகூா், பவித்திரம், நவலடிபட்டி, வேலம்பட்டி, கஸ்தூரிப்பட்டி, முட்டாஞ்செட்டி, கைகாட்டி, பொட்டிரெட்டிபட்டி, அலங்காநத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில், விவசாயிகள் அமைப்பின் மாவட்டச் செயலா் செல்வராஜ், ஜனநாயக வாலிபா் சங்கத்தைச் சோ்ந்த சிவச்சந்திரன், பால் உற்பத்தியாளா் சங்க மாவட்டச் செயலா் சதாசிவம், கம்யூனிஸ்ட் கட்சியினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com