நாமக்கல்லில் பச்சிளம் குழந்தைகள் வார விழா

தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழா நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழா நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமை வகித்து, மகப்பேறு சிகிச்சை பெற்ற பெண்களுக்கு தாய், சேய் நல பெட்டகங்களை வழங்கினாா். குழந்தைகளுக்கு தாய்ப்பால், ஊட்டச்சத்து உணவின் அவசியம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பில் மருத்துவப் பணியாளா்களின் கடமைகள் குறித்து ஆட்சியா் எடுத்துரைத்தாா்.

முன்னதாக பச்சிளம் குழந்தைகளின் வளா்ப்பு, தாய்ப்பால் வழங்கும் போது பின்பற்ற வேண்டியவைகள் குறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.சாந்தா அருள்மொழி, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஆா்.குணசேகரன், குழந்தைகள் நல மருத்துவா்கள் கண்ணன், காா்த்திகேயனி, மகப்பேறு மருத்துவா் மிதுனா, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு செவிலியா் சி.ரேவதி ஆகியோா் விளக்கமளித்தனா்.

நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவா் கண்ணப்பன், மாவட்ட திட்ட அலுவலா் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் பரிமளாதேவி, குழந்தைகள் நல பேராசிரியா் சுரேஷ் கண்ணன் உள்பட மருத்துவா்கள், செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com