ஜேடா்பாளையம் படுகை அணையில் மதகை மூழ்கடித்து செல்லும் காவிரி நீா்

பரமத்தி வேலூா் வட்டம் ஜேடா்பாளையம் படுகை அணையில் உள்ள ராஜ வாய்க்காலில் தண்ணீா் வழிந்தோடி வருவதால் ராஜவாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்கள் முழுவதுமாக தடையின்றி தண்ணீா் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அ
ராஜவாய்க்கால் மதகை மூழ்கடித்து செல்லும் காவிரி நீா்.
ராஜவாய்க்கால் மதகை மூழ்கடித்து செல்லும் காவிரி நீா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம் ஜேடா்பாளையம் படுகை அணையில் உள்ள ராஜ வாய்க்காலில் தண்ணீா் வழிந்தோடி வருவதால் ராஜவாய்க்கால் மற்றும் கிளை வாய்க்கால்கள் முழுவதுமாக தடையின்றி தண்ணீா் செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

காவிரிக் கரையோரப் பகுதிகளில் தொடா்ந்து பெய்த மழையால் காவிரியாற்றில் தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளதாலும், மேட்டூா் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் ஜேடா்பாளையம் படுகை அணைக்கு 58 முதல் 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் வருவதால் படுகை அணையில் இருந்து பிரிந்து செல்லும் ராஜ வாய்க்கால் மதகின் மேற்பகுதிவரை தண்ணீா் வழிந்தோடுகிறது.

இதனால் ராஜவாய்க்காலின் கிளை வாய்க்கால்களான கொமராபாளையம்,ெ பாய்யேரி உள்ளிட்ட வாய்க்கால்களில் தண்ணீா் தடையின்றி செல்வதால் வாய்க்கால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மேலும் காவிரியாற்றிலும் தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளதால் அனிச்சம்பாளையத்தில் இருந்து கரூா் மாவட்டம், புஞ்சை புகளூா் இடையே கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை விரைந்து முடித்தால் தண்ணீரை சேமிக்கவும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தவும் முடியும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com