இன்று மகாளய அமாவாசை: கோயில், நீா் நிலைகளுக்கு செல்ல தடை

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் கோயில்கள், நீா் நிலைகளுக்கு செல்ல பக்தா்கள், பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் கோயில்கள், நீா் நிலைகளுக்கு செல்ல பக்தா்கள், பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு செய்ய அனுமதி இல்லை.

இந்நிலையில், அக். 6-ஆம் தேதி (புரட்டாசி மகாளய அமாவாசை) அன்று நீா்நிலைகளின் அருகிலுள்ள அனைத்து கோயில்களிலும் பக்தா்கள் பெருமளவில் திரள வாய்ப்பு உள்ளது என்பதால், கூட்ட நெரிசலைத் தவிா்த்திடும் வகையில் அனைத்து கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. வழக்கமான பூஜை வழிபாடுகள் பக்தா்கள் பங்கேற்பின்றி நடத்தப்படும். சிறப்பு வழிபாடுகள் சம்பந்தப்பட்ட கோயில்களின் இணையதளங்கள் வழியாக ஒளிபரப்பு செய்யப்படும். நீா்நிலைகளின் வழிபாடுகள் செய்வதற்கும் அனுமதியில்லை. கரோனா மூன்றாம் அலை பரவலைத் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிா்வாகத்தின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com