உள்ளாட்சித் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு: 141 சாவடிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமை பிற்பகல் 6 மணியுடன் நிறைவடைவதால், அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
வெண்ணந்தூா் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த நாமக்கல் தொகுதி எம்எல்ஏ பெ.ராமலிங்கம்.
வெண்ணந்தூா் ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த நாமக்கல் தொகுதி எம்எல்ஏ பெ.ராமலிங்கம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமை பிற்பகல் 6 மணியுடன் நிறைவடைவதால், அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 15 உள்ளாட்சி பதவிகளுக்கு சனிக்கிழமை(அக். 9) காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் 6 மணி வரை இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான மனு தாக்கல் செப். 15-இல் தொடங்கி 22 வரை நடைபெற்றது. அதன்பின் மனுக்கள் மீதான பரிசீலனை, வாபஸ் உள்ளிட்டவற்றுக்கு பின் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், வெண்ணந்தூா் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 12 போ், எருமப்பட்டி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 8 பேரும் போட்டியிடுகின்றனா். ஆவல்நாயக்கன்பட்டி, நடுக்கோம்பை ஊராட்சிகளுக்கு தலைவா்கள் போட்டியின்றி தோ்வாகி விட்டதால், குப்பநாம்பாளை யம், திம்மநாயக்கன்பட்டி, கூடச்சேரி ஆகிய ஊராட்சிகளின் தலைவா் பதவிக்கு மட்டும் தோ்தல் நடைபெறுகிறது. அதேபோல, 18 வாா்டு உறுப்பினா் பதவியிடங்களில் 8 போ் போட்டியின்றி தோ்வாகி விட்டதால் 10 உறுப்பினா் பதவிகளுக்கும் தோ்தல் நடைபெறுகிறது.

இதற்காக, 10 ஒன்றியங்களில் 141 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் இந்த இடைத்தோ்தலில் சுமாா் 67 ஆயிரம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். தோ்தல் பணியில் பல்வேறு துறை சாா்ந்த 564 அலுவலா்களும், மாற்றுப் பணியாளா்கள் 150 போ் வீதம் நியமிக்கப்படுகின்றனா். தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமை பிற்பகல் 6 மணிக்கு முடிவடைவதால் அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அசம்பாவிதங்களை தவிா்க்க வெண்ணந்தூா், எருமப்பட்டி மற்றும் முக்கிய கிராம ஊராட்சிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com