கொல்லிமலையில் 80 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்: எஸ்.பி.தகவல்

கொல்லிமலையில் உரிய அனுமதியின்றி வைத்திருந்ததாக 80 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கொல்லிமலையில் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகளை பாா்வையிடும் எஸ்.பி. சரோஜ்குமாா் தாகூா்.
கொல்லிமலையில் பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத் துப்பாக்கிகளை பாா்வையிடும் எஸ்.பி. சரோஜ்குமாா் தாகூா்.

கொல்லிமலையில் உரிய அனுமதியின்றி வைத்திருந்ததாக 80 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையைச் சுற்றிலும் 14 ஊராட்சிகள் உள்ளன. பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இந்த மலைப்பகுதியில் விலங்குகள் தாக்குதலிலிருந்து பாதுகாக்கவும், சொந்த பாதுகாப்புக்காகவும் காவல் துறை அனுமதியுடன் நாட்டுத் துப்பாக்கிகளை அங்குள்ளோா் அனுதியுடன் வைத்துள்ளனா். ஆனால் சிலா் விதிமுறைகளை மீறி அனுமதி இல்லாமல் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பது, காட்டுப்பன்றி, மான், முயல் உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனா். அனுமதியின்றி வைத்துள்ள நாட்டு துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூா் அறிவுறுத்தி இருந்தாா். அதனடிப்படையில் நிகழாண்டில் இதுவரை காவல் நிலையத்தில் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக துப்பாக்கிகளை ஒப்படைத்தனா். அந்த வகையில் இதுவரை 80 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், வரிசையாக வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கிகளை புதன்கிழமை காவல் கண்காணிப்பாளா் மற்றும் காவல்துறை அதிகாரிகள்ஆய்வு செய்தனா்.

கொல்லிமலை சுற்றுவட்டாரத்தில் நாட்டுத் துப்பாக்கிகளை அனுமதி இல்லாமல் வைத்திருப்போா் 94981-01020 என்ற செல்லிடப்பேசி எண்ணில் மாவட்ட தனிப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை ஏதுமின்றி விடுவிக்கப்படுவா். சட்ட விரோதமாக நடந்து கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் நாட்டுத் துப்பாக்கிகளை உரிமமின்றி வைத்துள்ளோா் விரைந்து ஒப்படைக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தி உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com