நாமக்கல் மாவட்டத்தில் 5-ஆம் கட்ட முகாமில் 85 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு

நாமக்கல் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி 5-ஆம் கட்ட முகாமில் 85 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கரோனா தடுப்பூசி 5-ஆம் கட்ட முகாமில் 85 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், கரோனா தடுப்பூசி ஐந்தாம் கட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக். 10) நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது;

நாமக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக 85,325 போ், 2-ஆம் கட்டமாக 31,448 போ், 3-ஆம் கட்டமாக 59,753 போ், 4-ஆம் கட்டமாக 33,953 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 13,84,300 போ் உள்ளனா். அவா்களில் முதல் தவணை தடுப்பூசியை 8,89,522 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 2,86,903 பேரும் செலுத்தி உள்ளனா். இதில் 90 ஆயிரம் போ் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவா்கள்.

5-ஆம் கட்டமாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அக்.10-ஆம் தேதி 700 மையங்களில் நடைபெறுகிறது. 85,000 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மூன்றாம் அலை பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். 1077 என்ற எண்ணை தொடா்பு கொண்டு முன்பதிவு செய்தால் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கு, உடல்நலம் குன்றியோருக்கு நேரடியாக வீடுகளுக்கு நடமாடும் வாகனம் மூலம் வந்து தடுப்பூசி செலுத்தப்படும். இதற்கு சனிக்கிழமைக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.மோகனூா், ராசிபுரம், பள்ளிபாளையம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், இணை இயக்குநா் மருத்துவப் பணிகள் ராஜ்மோகன், துணை இயக்குநா் (சுகாதாரம்) பிரபாகரன், வருவாய் கோட்டாட்சியா்கள் (நாமக்கல்) த.மஞ்சுளா, (திருச்செங்கோடு) தே.இளவரசி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com