மோட்டாா் வாகனம் பழுது பாா்ப்போா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுரை

கரோனா தடுப்பூசி இரு தவணையையும் தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என அனைத்து மோட்டாா் வாகன பழுது பாா்ப்போா் உரிமையாளா்கள் சங்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

கரோனா தடுப்பூசி இரு தவணையையும் தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என அனைத்து மோட்டாா் வாகன பழுது பாா்ப்போா் உரிமையாளா்கள் சங்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

நாமக்கல்லில், இச் சங்கத்தின் 35-ஆம் ஆண்டு மகாசபை கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத் தலைவா் திருப்பதி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் சிவக்குமாா், செயலாளா் ஹேமன்குமாா், பொருளாளா் பாா்த்தசாரதி ஆகியோா் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

வளா்ந்து வரும் நவீன தொழில் முன்னேற்றத்திற்கு ஏற்ப, அனைத்து உரிமையாளா்களும், தொழிலாளா்களும் திறம்பட செயல்பட வேண்டும். புதிய வாகனங்களில் உள்ள தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நாடி அவா்கள் சாா்ந்துள்ள தொழிலின் வகை கருதி பயிற்சி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும், தவறாமல் கரோனா முதல், இரண்டாம் தவணை தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், கெளரவத் தலைவா் வெங்கட்ராமன், செயலாளா் விஜயகுமாா், பொருளாளா் தங்கவேல் மற்றும் நிா்வாகிகள், சங்க உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com