முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
விஸ்வ ஹிந்து பரிஷத் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 11th October 2021 02:13 AM | Last Updated : 11th October 2021 02:13 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா்.
நாமக்கல்லில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காஷ்மீரில் ஹிந்துக்கள், சீக்கியா்கள் மற்றும் பாதுகாப்பு படைவீரா்கள் பயங்கரவாதிகளால் தொடா்ந்து தாக்கப்படுவதை கண்டித்து, நாமக்கல் - மோகனூா் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்ட செயலாளா் ரகுபதி, மாவட்டச் செயலாளா் மகாதேவன், மாவட்ட பொருளாளா் ஹரீஷ், நகர செயலாளா் அருள், கல்வியாளா் பிரணவ்குமாா், ஆா்எஸ்எஸ் நிா்வாகிகள் சுப்பிரமணி, சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.