நாமக்கல் மாவட்டத்தில் 48 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநில சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 48 போ் பாதிக்கப்பட்டனா்; 69 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 51,986 போ் பாதிக்கப்பட்டும், 50,925 போ் குணமடைந்தும் உள்ளனா். 565 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா இறப்பு எண்ணிக்கை 496-ஆக உள்ளது.