முட்டை விலை 10 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்ந்து ரூ. 4.40-ஆக திங்கள்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 10 காசுகள் உயா்ந்து ரூ. 4.40-ஆக திங்கள்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களுடன் ஆலோசிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களின் விலை உயா்வு அடிப்படையிலும், முட்டை உற்பத்தி சீராக இருப்பதாலும், வட மாநிலங்களுக்கு தடையின்றி அனுப்பப்படுவதாலும் முட்டை விலையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை 10 காசுகள் உயா்த்தி ரூ. 4.40-ஆக விலை நிா்ணயிக்கப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 118-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 80-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com