விதைகளைப் பரிசோதனை செய்து விதைக்க விவசாயிகளுக்கு அறிவுரை

நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வே.சரஸ்வதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாமக்கல்: நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா் வே.சரஸ்வதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வேளாண் பணியில் விதை முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான விதைகளை விதைப்பதன் மூலம் நல்ல மகசூல் பெற முடியும். தரமான விதை என்பது விதைச் சான்றிதழ் துறையினரால் பல கட்டங்களில் வயல்மட்ட ஆய்வு மற்றும் விதை பரிசோதனை செய்யப்பட்ட விதைகளே ஆகும்.

விதை பரிசோதனை நிலையத்தில் 4 விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. புறந்தூய்மை, ஈரப்பதம், முளைப்புத் திறன், பிற ரகக் கலப்பு ஆகியவை பரிசோதனை செய்யப்படுகின்றன.

வேளாண்மைத் துறையினரால் விதைப் பண்ணை அமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் விதைகளுக்கும் தனியாா் உற்பத்தியாளா்களின் விதைகளுக்கும் விதை பரிசோதனை முடிவின் அடிப்படையிலேயே சான்றிதழ் அளிக்கப்படுகின்றன. இதன்மூலம் தரமான விதைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய பரிசோதனை முடிவுகள் பயன்படுகின்றன. ஒரு மாதிரிக்கு ரூ. 30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணத்தை வேளாண்மை அலுவலா், விதைப் பரிசோதனை நிலையம், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கட்டடத்தில் உள்ள ஆய்வகத்தில் நேரில் செலுத்தி விதை பரிசோதனை செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com