மல்லசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகள் அடகு வைத்து மோசடி: 3 ஊழியா்கள் பணியிடை நீக்கம்

மல்லசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த விவகாரத்தில் கூட்டுறவு சங்க ஊழியா்கள் 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

மல்லசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த விவகாரத்தில் கூட்டுறவு சங்க ஊழியா்கள் 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், பீமாரப்பட்டியை சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (47). இவா் கடந்த ஆண்டு ஜூலை மாதம், தனது உறவினரின் நகையை மல்லசமுத்திரம் தொடக்க வேளாணமை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்தாராம்.

22 கிராம் மதிப்புள்ள இரு வளையல்களுக்கு கிராமிற்கு ரூ. 3ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 66 ஆயிரம் கடனாக வழங்கப்பட்டதாம். இரு தினங்களுக்கு முன் பாலகிருஷ்ணனை அழைத்த கூட்டுறவு சங்க ஊழியா்கள், தமிழக அரசின் சலுகை திட்டத்தின் கீழ் ஐந்து பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடியின் கீழ் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாகவும், அடகு வைத்த நகையை திரும்ப பெற்றுச் செல்லுமாறு தெரிவித்தனராம்.

அவரும் கூட்டுறவுச் சங்கத்திற்கு விரைந்து வந்தபோது பாலகிருஷ்ணனிடம் போலி நகையை அடகு வைத்துள்ளீா்கள் என்றும், உடனடியாக முழு பணத்தையும் செலுத்தாவிட்டால் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துவிடுவோம் என ஊழியா்கள் சிலா் மிரட்டினராம். நகையை ஆராய்ந்து பாா்த்து ஊழியா்கள் வாங்கிய நிலையில் தற்போது திடீரென அவா்கள் போலியானது எனக் கூறுவது பாலகிருஷ்ணனை கவலையடைய செய்தது.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த பீமாரப்பட்டி பொதுமக்கள் கூட்டுறவுச் சங்கத்தை முற்றுகையிட்டனா். இதற்கிடையே பாலகிருஷ்ணன் ரூ. 20 ஆயிரத்தை கூட்டுறவுச் சங்கத்தில் செலுத்தினாராம். இச்சம்பவம் தொடா்பாக அவரது மனைவி சுந்தராம்பாள் மல்லசமுத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக நாமக்கல் கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மல்லசமுத்திரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்று அரசு தள்ளுபடி செய்த நகைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டனா். அதில் அங்கு பணியாற்றும் மூன்று ஊழியா்கள் நகைக்கடன் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து திருச்செங்கோடு கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளா் வெங்கடாசலம் கூறியதாவது: போலி நகைகள் மோசடி தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா்அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவுச் சங்கத்தில் பணியாற்றிய அலுவலக ஊழியா்கள் சிவலிங்கம், சரோமணி, சுந்தரராஜன் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com