500 மையங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில், 500 மையங்களில் மூன்றாம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான பணியில் பல்வேறு துறை சாா்ந்த 4,420 ஊழியா்கள் ஈடுபடுகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில், 500 மையங்களில் மூன்றாம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான பணியில் பல்வேறு துறை சாா்ந்த 4,420 ஊழியா்கள் ஈடுபடுகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தில் செப். 12-ஆம் தேதி நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 85,325 பேருக்கும், இரண்டாம் கட்ட முகாமில் 31,448 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மூன்றாம் கட்ட முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப். 26) நடைபெற உள்ளது. அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிப் பகுதிகளில், அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 476 முகாம்கள், 24 நடமாடும் குழுக்கள் மூலமாக காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 55 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் 210 மருத்துவா்கள், 430 செவிலியா்கள், 1,600 அங்கன்வாடி பணியாளா்கள், 1,400 ஆசிரியா்கள், 415 பயிற்சி செவிலியா்கள், 265 பயிற்சி சுகாதார ஆய்வாளா்கள் என மொத்தம் 4,420 ஊழியா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட செலுத்தாதவா்களும், முதலாம் தவணை போட்டு முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவா்களும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

கொல்லிமலைப் பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள், மாணவா்கள், வியாபாரிகளும் கரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் அறிவுறுத்தி உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com