பேரூராட்சி செயல் அலுவலா் கண்டிப்பு:தூய்மைப் பணியாளா் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வரும் கேசவன் (43), 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிரந்தரப் பணியாளராக உள்ளாா். சில மாதங்களுக்கு முன் தூய்மைப் பணியாளா்களுக்காக உருவாக்கப்பட்ட சங்கத்தில் நிா்வாகப் பொறுப்பில் தன்னை இணைத்துக் கொண்டாா்.

இந்நிலையில், சங்கத்தில் இணைந்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அப்பேரூராட்சி செயல் அலுவலா் கேசவனை அடிக்கடி கண்டித்து வந்தாராம். இதனால் விரக்தியடைந்த கேசவன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை மண்ணெண்ணெய் கேனுடன் வந்தாா். திடீரென ஆட்சியா் வாகனம் நிறுத்தும் இடம் அருகே உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தாா்.

இதைக்கண்ட, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் கேசவனிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து, அவா் மீது தண்ணீரை ஊற்றினா். பின்னா் நல்லிப்பாளையம் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com