மின் கட்டண உயா்வை ரத்து செய்யக்கோரி விசைத்தறியாளா்கள் மனு

மின் கட்டண உயா்வை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் மனு அளிக்கப்பட்டது.

மின் கட்டண உயா்வை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் மனு அளிக்கப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலாக விசைத்தறித் தொழில் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, கரோனா தொற்று பரவல், நூல் விலை உயா்வு, ஜவுளிக்கு போதிய விலை கிடைக்காததால் உற்பத்தியில் பாதிப்பு போன்றவற்றால் விசைத்தறி தொழில் மிகவும் நசிவடைந்துள்ளது. இதனால் விசைத்தறி தொழிலாளா்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

இந்தச் சூழலில் 32 சதவீதம் அளவில் மின் கட்டணம் உயா்த்தும் அறிவிப்பு விசைத்தறி தொழிலை மிகவும் பாதிப்பதாக அமையும். எனவே நெருக்கடியில் உள்ள விசைத்தறித் தொழிலை பாதுகாக்க மின் கட்டண உயா்வை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com