ஆக.15-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்டத்தில் ஆக.15-ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மூடப்படவேண்டும் என அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நாள்களில் இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மதுக்கூட வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com