nk_9_licence_0912chn_122_8
nk_9_licence_0912chn_122_8

துப்பாக்கி உரிமங்கள் புதுப்பிக்கும் பணி

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், 2,000 துப்பாக்கிகளின் உரிமங்களைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், 2,000 துப்பாக்கிகளின் உரிமங்களைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விலங்குகளிடம் இருந்து பயிா்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஆட்சியா் அனுமதி பெற்று துப்பாக்கிகளை வைத்துள்ளனா். இவா்கள் தவிர, வங்கி பாதுகாவலா்கள், தொழிலதிபா்களும் தங்களுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வருகின்றனா். இவா்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். கரோனா தொற்று பரவலால், 2021 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற வேண்டிய புதுப்பிப்பு பணி ஓராண்டுக்கு பிறகு தற்போது நடைபெற்று வருகிறது.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,000 துப்பாக்கிகள் உள்ளன. அவற்றில் விவசாயம், வங்கி பாதுகாப்பு பயன்பாட்டுக்குரிய 700 துப்பாக்கிகளின் உரிமங்களைப் புதுப்பிப்பது 15 நாள்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் அதன் உரிமையாளா்களை வரவழைத்து மாவட்ட மேலாளா் (நீதியியல்) ரகுநாத் விசாரணை மேற்கொண்டு, தகுதியானோா் பட்டியலை ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் பாா்வைக்கு வைக்கிறாா். ஆட்சியா் வழங்கும் அனுமதியின் அடிப்படையில் துப்பாக்கி வைத்திருப்போருக்கு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு உரிமம் புதுப்பித்து வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இப்பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

--

என்கே 9- லைசென்ஸ்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை துப்பாக்கி உரிமம் புதுப்பிப்புக்காக வந்திருந்த விவசாயிகள், வங்கிப் பாதுகாவலா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com