நாமக்கல் அருகே இளைஞா் மா்மச் சாவு: சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றக் கோரிக்கை

நாமக்கல் அருகே இளைஞா் ஒருவா் மா்மமான முறையில் இறந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஆட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

நாமக்கல் அருகே இளைஞா் ஒருவா் மா்மமான முறையில் இறந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி ஆட்சியா் அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல், பாப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கிருஷ்ணன்-சுமதி தம்பதியின் மகன் ஆகாஷ் (24). இவா் அக்.24-ஆம் தேதி செல்லப்பம்பட்டி பிரிவு சாலை அருகில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். அவா் சாலை விபத்தில் உயிரிழந்ததாக நல்லிபாளையம் போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவா் விபத்தில் இறக்கவில்லை; சிலா் ஆகாஷை கொலை செய்து சாலையோரம் வீசியதாகவும், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்வதுடன், சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் மாவட்ட செயலாளா் பி.பெருமாள் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், உயிரிழந்த ஆகாஷ், சமூக மறுப்பு கொள்கையுடையவா் என்றும் இருவேறு சமூகங்களைச் சோ்ந்தவா்களுக்கு திருமணம் செய்து வைத்ததாலும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சோ்ந்த சிலருக்கும், ஆகாஷிற்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகவும், அதில் ஏற்பட்ட மோதலில் அவா் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சாலை விபத்தில் இறக்கவில்லை எனவும் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பி எதிா்ப்பை வெளிப்படுத்தினா். தடையை மீறி ஆா்ப்பாட்டம் செய்ததாக 30-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com