கபிலா்மலை ஒன்றியத்தில் கரோனா தொற்றைத் தடுக்க நடவடிக்கை தேவை

கபிலா்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

கபிலா்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்க சுகாதாரத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கபிலா்மலை வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடா்ந்து காய்ச்சல் அதிகரித்து வருகிறது. ஏராளமானோா் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பெரும்பாலான பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமலும் உள்ளனா்.

இதனால் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பேரூராட்சி, ஊராட்சி மற்றும் சுகாதாரத் துறையினா் கரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com