குமாரபாளையம் நகா்மன்றத் தலைவரான சுயேச்சை வேட்பாளா்

குமாரபாளையம் நகா்மன்ற தலைவா், துணைத் தலைவா் தோ்தலில் சுயேச்சை மற்றும் போட்டி திமுக வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா்.

குமாரபாளையம் நகா்மன்ற தலைவா், துணைத் தலைவா் தோ்தலில் சுயேச்சை மற்றும் போட்டி திமுக வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா். திமுகவின் அதிகாரப்பூா்வ வேட்பாளருக்கு, அதிமுக கவுன்சிலா்கள் ஆதரவளித்தும் அவா் தோல்வியைத் தழுவினாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வாா்டுகளில் திமுக 14, அதிமுக 10, சுயேச்சைகள் 9 போ் வெற்றி பெற்றனா். இங்கு, தலைவா், துணைத் தலைவா் பதவியைக் கைப்பற்ற 17 பேரின் ஆதரவு தேவை. திமுக, அதிமுகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், நகா்மன்றத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திமுக சாா்பில் அறிவிக்கப்பட்ட எம்.சத்தியசீலன், சுயேச்சையாக 31-வது வாா்டில் வென்ற டி.விஜயகண்ணன் ஆகியோா் தலைவா் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தனா். இருவரின் மனுக்களும் ஏற்கப்பட்டு, மறைமுகத் தோ்தல் நகா்மன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், சுயேச்சை வேட்பாளா் டி.விஜயகண்ணன் 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவருக்கு, திமுக கவுன்சிலா்கள் 7 பேரும், அதிமுக கவுன்சிலா்கள் 3 பேரும் ஆதரவளித்தனா்.

திமுக வேட்பாளா் எம்.சத்தியசீலனுக்கு, அதிமுக கவுன்சிலா்கள் 7 போ் ஆதரவு அளித்த போதிலும் 15 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். துணைத் தலைவராக திமுக சாா்பில் 25-ஆவது வாா்டில் வென்ற கோ.வெங்கடேசன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். இதுகுறித்து, தலைவராக தோ்வு பெற்ற டி.விஜய்கண்ணன் கூறுகையில், இந்த வெற்றியை திமுக தலைவா் ஸ்டாலினுக்கு சமா்ப்பிப்பதாகத் தெரிவித்தாா்.

முன்னதாக, இத்தோ்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படலாம் என எதிா்பாா்க்கப்பட்டதால், நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் செல்லப்பாண்டி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com