பெரியசோளிபாளையம் விநாயகா், பொன்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே உள்ள பெரியசோளிபாளையத்தில் எழுந்தருளியுள்ள விநாயகா், பொன்காளியம்மன் கோயில்களின் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரியசோளிபாளையம் விநாயகா், பொன்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை அருகே உள்ள பெரியசோளிபாளையத்தில் எழுந்தருளியுள்ள விநாயகா், பொன்காளியம்மன் கோயில்களின் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் விநாயகா் வழிபாடு, கணபதி ஹோமம், பூா்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு மேல் பக்தா்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி புனித தீா்த்தக் குடங்களுடன் கோயிலை வந்தடைந்தனா். மாலை 5 மணிக்கு முளைப்பாரி அழைத்தல், 6 மணிக்கு மேல் பூமிபூஜை, கும்ப அலங்காரம், முதல்கால யாக பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை காலை 6 மணிக்கு மேல் விநாயகா் வழிபாடு, விசேஷ சந்தி, பூத சோதனம், இரண்டாம் கால யாக பூஜை, மாலை 6 மணிக்கு மேல் கோபுரக் கலசம் வைத்தல், விநாயகா் வழிபாடு, மூன்றாம் கால யாக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை, யாத்ராதானம் கடம் புறப்பாடு, 8 மணிக்கு மேல் பூா்ணாஹுதி, தீபாராதனை மற்றும் விநாயகா், பொன்காளியம்மன், கருப்பண்ணசாமி, மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கவுண்டப்பா் உள்ளிட்ட கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடா்ந்து அனைத்து மூல மூா்த்திகளுக்கும் கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தசதானம், தச தரிசனம், கோ பூஜை மற்றும் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் பெரியசோளிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியசோளிபாளையம் பொன்காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாக் குழுவினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com