மின் சிக்கனம்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு பயிற்சி

நாமக்கல்லில் மின் சிக்கனம் மற்றும் மின் திறன் விழிப்புணா்வு குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.

நாமக்கல்லில் மின் சிக்கனம் மற்றும் மின் திறன் விழிப்புணா்வு குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் சாா்பில், நாமக்கல்லில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பை மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் பாலசுப்பிரமணியம் தொடக்கி வைத்தாா். செயற்பொறியாளா்கள் பரிமளா, சபாநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக உளுந்தூா்பேட்டை மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளா் சிவராமன், விவசாயத்துறை உதவி பொறியாளா் பிரவீன்குமாா் ஆகியோா் பங்கேற்று பேசினா். நாமக்கல் கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு மின்வாரிய பிரிவு அலுவலக பகுதிகளிலிருந்து விவசாயிகள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு இலவசமாக மின்சார விளக்கு, விழிப்புணா்வு கையேடுகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், நாமக்கல் கோட்ட உதவி பொறியாளா் ஆனந்த்பாபு மற்றும் மின்வாரிய அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com