சுகாதாரத் துறை சாா்பில் மினி மாராத்தான் போட்டி: 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட சுகாதாரத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மினி மாராத்தான் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா், துறை பணியாளா்கள் ஆா்வமுடன் பங்கேற்றனா்.
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மினி மாராத்தான் போட்டியில் பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கிய மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜெ.பிரபாகரன்.

தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழா டிச. 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது. இதனையொட்டி, நாமக்கல் மாவட்டத்திற்கு கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடா் ஜோதி கொண்டு வரப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மினிமாராத்தான் போட்டி நடைபெற்றது.

நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரியில் தொடங்கிய மினி மாராத்தான் 3 கி.மீ. தொலைவில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. சுகாதாரத் துறையை சாா்ந்த ஆண், பெண் பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள், 18 வயதுக்கு மேற்பட்டோா் என 500 போ் கலந்து கொண்டனா். இப்போட்டியினை, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ஜெ.பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com