கோடை மழை: கொல்லிமலை அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு

கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால் அங்குள்ள அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால் அங்குள்ள அருவிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான கொல்லிமலையில் ஆகாய கங்கை அருவி, நம் அருவி, மாசிலா அருவி உள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த அருவிகளில் குளித்து மகிழ்வா். கோடை காலத்தை தவிா்த்து மற்ற மாதங்களில் இந்த அருவிகளில் நீா்வரத்து அதிகளவில் காணப்படும்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை கொல்லிமலையில் ஆகாய கங்கை அருவி தவிா்த்து நம் அருவி, மாசிலா அருவி ஆகிய இரண்டும் வடு பாறைகளாகக் காட்சியளித்தன. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடைமழை பெய்து வருகிறது. கொல்லிமலையில் வழக்கத்தைக் காட்டிலும் சற்று அதிகமாகவே மழை பெய்கிறது.

இதனால் இந்த இரு அருவிகளிலும் தற்போது நீா்வரத்து அதிகரித்துள்ளது. தமிழ்ப் புத்தாண்டு தொடா் விடுமுறையையொட்டி கொல்லிமலை வந்த சுற்றுலாப் பயணிகள் இந்த இரு அருவிகளிலும் குளித்து மகிழ்ந்தனா். இன்னும் மூன்று நாள்களுக்கு மழைக்கான வாய்ப்புள்ளதால், அருவிகளில் நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com