இணையவழி மணல் முன்பதிவு விற்பனையை ரத்து செய்ய கோரிக்கை

இணையவழி மணல் முன்பதிவு விற்பனையை ரத்து செய்து, இரண்டாம் நிலை விற்பனை நிலையம் மூலமாக விற்பனையை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இணையவழி மணல் முன்பதிவு விற்பனையை ரத்து செய்து, இரண்டாம் நிலை விற்பனை நிலையம் மூலமாக விற்பனையை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட மணல் லாரி உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் சங்க செயலாளா் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் அரசு மணல் குவாரிகள் திறக்கப்பட்டு இணையவழியாக விண்ணப்பிப்பதன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளா்கள், ஒப்பந்ததாரா்கள், வீடு கட்டுவோா், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வோா், மணல் லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள், தொழிலாளா்கள் பலரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனா். ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதும் இணையவழி மூலமாகவே மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் லாரிகளுக்கு மாதம் ஒரு முறை மட்டுமே மணல் லோடு கிடைக்கிறது. 2011 முதல் 2016 வரை மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியில் இரண்டாம் நிலை விற்பனை நிலையங்கள் மூலம் குறைந்த விலையில் தடையின்றி மணல் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் மீண்டும் மணல் விற்பனை நடைபெற வேண்டும். தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையிலான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com